விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2016 | 8:47 am

மகசின் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதம் 17 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

தம்மீதான நீதிமன்ற விசாரணைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

14 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த வாரம் கைதியொருவர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விளக்கமறியல் நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 14பேர் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அரச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி சட்ட மாஅதிபர் திணைக்களத்திலிருந்து எவரும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகாத காரணத்தினால் நாளை வரை தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை நீதவான் ஒத்துவைத்தார்.

அத்துடன் அடுத்த வழக்கு தினத்தன்று சட்ட மாஅதிபர் திணைக்களத்திலிருந்து பிரதிநிதிகளை ஆஜராகுமாறும் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல அழைப்பாணை விடுத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்