ஜெனீவா விசாரணைகளின் போது  சர்வதேச கண்காணிப்பு அவசியம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

ஜெனீவா விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

ஜெனீவா விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2016 | 3:09 pm

இலங்கை தொடர்பில் மேற்கொள்ளும் ஜெனீவா விசாரணைகளின் போது சர்வதேச ஆலோசகர்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என யுத்தத்தை முன்னெடுத்த இராணுவ தளபதி என்ற ரீதியில் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டதிட்டங்களை பின்பற்றியே யுத்தத்தை முன்னெடுத்ததாகவும், சட்டங்களை மீறியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வௌ்ளைக்கொடி விவகாரத்தில் மூன்று வருடங்கள் தான் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானதாகவும், இந்த விடயம் தொடர்பில் உண்மையை கண்டறிய கட்டாயம் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்