கழுகொன்றை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது

கழுகொன்றை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது

கழுகொன்றை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2016 | 4:18 pm

கழுகொன்றை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொன்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கழுகொன்றை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் நிழற்படத்துடன் தகவல்கள் வௌியானதை இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

ஹபராதுவ பம்பகல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஹபராதுவ பொலிஸாரின் உதவியுடன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளாதாகவும் அவர் மேலும் கூறினார்.

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக தெரிவித்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்