அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களுக்கான நெற் கொள்வனவு இந்த வாரத்தில் ஆரம்பம்

அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களுக்கான நெற் கொள்வனவு இந்த வாரத்தில் ஆரம்பம்

அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களுக்கான நெற் கொள்வனவு இந்த வாரத்தில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2016 | 8:42 am

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நெற் கொள்வனவு நடவடிக்கைகள் இந்த வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக நெல் விநியோக சபை தெரிவித்துள்ளது.

நெற் கொள்வனவிற்காக,ஏற்கனவே களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சபைத்தலைவர் எம்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கிளநொச்சி, முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2 வாரங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள மேலும் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நெல் விநியோக சபை கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்