அண்மையில் ஏற்பட்ட மின்சாரத்தடைக்கு மின்னல் தாக்கமே காரணம் – மின்சக்தி அமைச்சு

அண்மையில் ஏற்பட்ட மின்சாரத்தடைக்கு மின்னல் தாக்கமே காரணம் – மின்சக்தி அமைச்சு

அண்மையில் ஏற்பட்ட மின்சாரத்தடைக்கு மின்னல் தாக்கமே காரணம் – மின்சக்தி அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2016 | 8:35 am

நாடு முழுவதும் அண்மையில் மின்சாரம் தடைப்பட்டமைக்கு மின்னல் தாக்கம் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுவதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்ட விடயம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று அமைச்சுக்கு கையளிக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

சில நாசக்காரர்களாலேயே மின்சாரம் தடைப்பட்டதாக சிலர் கூறி வருவதாகவும், அவ்வாறு இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருக்க மாட்டாது என தாம் நம்புவதாகவும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்