2016 – 2017 தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழு தலைவராக அரவிந்த டீ சில்வா நியமனம்

2016 – 2017 தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழு தலைவராக அரவிந்த டீ சில்வா நியமனம்

2016 – 2017 தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழு தலைவராக அரவிந்த டீ சில்வா நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

08 Mar, 2016 | 10:45 am

2016 – 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது ஊடக சந்திப்பு விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகரவினால் நியமிக்கப்பட்ட புதிய தேசிய கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவராக அரவிந்த டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் 2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இக்குழுவின் அங்கத்தவர்களாக குமார் சங்கக்கார, ரொமேஷ் களுவிதாரன, லலித் கலுப்பெரும, ரஞ்சித் மதுரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்