வெலிக்கடை சிறைச்சாலை அருகே கர்ப்பிணித் தாய் மீது துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது

வெலிக்கடை சிறைச்சாலை அருகே கர்ப்பிணித் தாய் மீது துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Bella Dalima

08 Mar, 2016 | 10:56 am

வெலிக்கடை சிறைச்சாலை சந்திக்கு அருகில் கர்ப்பிணித் தாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேநகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம, மிதிகம, பிட்டதூவ வீதியில் குறித்த சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவினர் குறிப்பிட்டனர்.

வெலிகமை பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து கைக்குண்டு மற்றும் 5 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்