வலிகாமம் வடக்கில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது

வலிகாமம் வடக்கில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2016 | 8:07 pm

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கடற்படையினரின் தேவைக்காக காணியொன்றை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டுப் பணி மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

சேந்தான் குளம் ஆரோக்கியநாதன் தேவாலயத்திற்கு சொந்தமான நான்கு பரப்பு காணியே கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிகாலத்திலும் இந்த காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் மக்களின் எதிர்ப்பு காரணமாக அந்தப் பணிகளை இடைநிறுத்துவதற்கு நேரிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் சேந்தான்குளம் ஆரோக்கியநாதர் தேவாலயத்திற்கு சொந்தமான காணியை அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள் சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு கூடியிருந்த வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிவடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ். சஜீவன் உள்ளிட்டவர்கள் அளவீட்டுப் பணிகளுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

காணி அளவீட்டுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை பொலிஸாரும் கடற்படையினரரும் கையடக்க தொலைபேசிகள் மற்றும் புகைப்பட கருவிகள் மூலம் படம் பிடித்த காட்சியும் எமது கமராவில் பதிவானது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்