மக்கள் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தொடரும் ‘மக்கள் சக்தி’ குழுவினரின் பயணம்

மக்கள் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தொடரும் ‘மக்கள் சக்தி’ குழுவினரின் பயணம்

மக்கள் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தொடரும் ‘மக்கள் சக்தி’ குழுவினரின் பயணம்

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2016 | 8:53 pm

நியூஸ்பெஸ்ட் பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் மக்கள் சக்தி திட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

தென் மாகாண மக்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக சென்றுள்ள எமது குழுவினர் ஹக்மன எல்லேவெல விஹாரையில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களை தொடர்ந்து பயணத்தை ஆரம்பித்தனர்.

பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தாம் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் குறித்து எமது குழுவினரிடம் அறிவிப்பதற்காக விஹாரைக்கு வந்திருந்தனர்.

மற்ற குழுவினர் உவரஹேன, சுதுகலஹேன, அளுத்ஹேன, களுவலாகெட்டிய ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்களின் பிரச்சினையை கேட்டறிந்தனர்.

சுத்தமான குடிநீரின்மை இந்த அனைத்து கிராமங்களுக்கும் பொதுவான பிரச்சினையாகும்.

இந்த கிராமங்களுக்கு செல்லும் வீதிகளும் புனரமைக்கப்படாதுள்ளன.

எமது குழுவினர் சென்ற கிராமங்களில் எல்லேவெல கிராமம் முக்கியத்துவம் பெறுகின்றது.

226 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தின் அநேகமானவர்கள் கறுவா உற்பத்தியை ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று பலர் புற்றுநோயாலும் பீடிக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான எச்.ஏ.பொடிமஹத்தயா என்பவர் 8 மாதங்களுக்கு முன்னர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் புற்றுநோயால் பீடிக்கப்படிருந்த குடும்பமொன்றையும் எமது குழுவினர் சந்தித்தனர்.

பொரளுஹேன கிராமத்தில் நிலவும் நீர் பிச்சினை குறித்து ஆராய்வதற்காக எமது மற்றுமொரு குழுவினர் சென்றனர்.

முறையற்ற வீதிக் கட்டமைப்பு எமது பயணத்திற்கு சவாலாக அமைந்தது

கிராமத்தின் நலன் கருதி நீர் விநியோகத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டபோதிலும் அந்த திட்டத்தினால் எவரும் பயனடையவில்லை என மக்கள் சுட்டிக்காட்டினர்.

150 குடும்பங்களுக்கு நீரை விநியோகிப்பதற்காக 6 வருடங்களுக்கு முன்னதாக நகர அபிவிருத்தி அமைச்சு இந்த நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பித்திருந்தது.

மேலும் வடமத்திய மாகாணத்திற்கு சென்றுள்ள மற்றுமொரு குழுவினர் கவுடுல்ல மற்றும் மின்னேரிய ஆகிய தேசிய சரணாலயங்களுக்கு நடுவே அமைந்துள்ள றொட்டவெவ கிராமத்திற்கு சென்றனர்.

இங்கு குடிநீர் பிரச்சினையே மக்களின் முக்கிய பிரச்சினையாகும்.

இந்த மக்களுக்கான போக்குவரத்து வசதியும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்தது

றொட்டவெவ கிராம மக்கள் 50 கிலோமீற்றர் வரை வைத்தியசாலைக்கு நடந்து செல்ல நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இயற்கை பசளை உற்பத்தி நிலையம் இன்று மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கின்றது

இதேவேளை. ஹத்தரஸ்கொட்டுவ பகுதியில் விவசாயத்தில் ஈடுபடுவோரையும் எமது குழு சந்தித்தது.

ஹல்மில்லாவ மற்றும் மாகுல ஆகிய பகுதிகளும் எமது குழுவினர் சென்றிருந்தனர்.

வடமாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக சென்றுள்ள மக்கள் சக்தி குழுவினருக்கு ஆளங்குழத்தில் வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு கூடியிருந்த மக்கள் தமது பிரதேசத்தில் நிலவும் பொதுவான பிரச்சினைகளை எமது குழுவினரிடம் தெரிவித்தனர்.

வவுனியா நகரில் இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பல நூற்றாண்டு பழமையான புதுவிளாங்குளம் கிராமத்தின் தற்போதைய நிலை குறித்தும் மக்கள் சக்தி குழுவினர் ஆராய்ந்தனர்.

தொடர்ந்து மகிழங்குளம், விளக்குவைத்த குளம், புதிய வேலர் சின்னகுளம், அரசடிக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் எமது குழுவினர் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.

இதேவேளை, எமது மற்றுமொரு குழு வவுனியா கனகராயன் குளம் புதுக்குளம் ஆகிய பகுதிகளுக்கு சென்றிருந்தது.

புத்துக்குளம் பண்டிதமணி கணபதிப்பிள்ளை தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் வகுப்பறை பற்றாக்குறை தொடர்பிலும் மக்கள் சக்தி குழுவினரிடம் தகவல்கள் முன்வைக்கப்பட்டன

புளியங்குளம் ராமனூர் கிராமத்தில் உள்ள விவசாய குளம் புனரமைக்கப்படாமை தொடர்பில் விவசாயிகள் எமது குழுவினருக்கு அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் சக்தி குழுவினர் விவசாயிகளுடன் குளம் அமைந்துள்ள இடத்தை பார்வையிடுவதற்காக சென்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்