புகலிடக் கோரிக்கையாளர்களைக் கட்டுப்படுத்த ரோந்துக் கப்பல்களை அனுப்பவுள்ளது நேட்டோ

புகலிடக் கோரிக்கையாளர்களைக் கட்டுப்படுத்த ரோந்துக் கப்பல்களை அனுப்பவுள்ளது நேட்டோ

புகலிடக் கோரிக்கையாளர்களைக் கட்டுப்படுத்த ரோந்துக் கப்பல்களை அனுப்பவுள்ளது நேட்டோ

எழுத்தாளர் Bella Dalima

08 Mar, 2016 | 11:22 am

புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், துருக்கி மற்றும் கிரேக்க கடல் பகுதிகளுக்கு ரோந்துக் கப்பல்களை அனுப்பவுள்ளதாக நேட்டோ அறிவித்துள்ளது.

மனிதக் கடத்தல்களைத் தடுக்கும் வகையில், சர்வதேசத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை துருக்கி வரவேற்றுள்ளது.

புகலிக் கோரிக்கையாளர்கள் வருகையைத் தடுக்கும் நோக்கிலான செயற்றிட்டங்களை ஆரம்பித்துள்ளதாக துருக்கி பிரதமருடனான இணை ஊடக சந்திப்பில் நேட்டோ செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் எல்லைப்பகுதியில் தமது ஒத்துழைப்பை விஸ்தரிக்கவுள்ளதாகவும் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவும் இதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா, துருக்கி மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளின் கப்பல்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தை நேட்டோ வழிநடத்துகின்றது.

இதற்கமைய, சர்வதேச கடற்பரப்பில் குறித்த கப்பல்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்