தமிழ் அரசியல் கைதிகள் 15 ஆவது நாளாக தொடர்ந்தும் உண்ணாவிரதம்

தமிழ் அரசியல் கைதிகள் 15 ஆவது நாளாக தொடர்ந்தும் உண்ணாவிரதம்

தமிழ் அரசியல் கைதிகள் 15 ஆவது நாளாக தொடர்ந்தும் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

08 Mar, 2016 | 1:16 pm

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 15 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தம் மீதான நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளில் மூவர் சுகவீனமுற்ற நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சிகிச்சைகளின் பின்னர் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியதுடன் நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் உடல்நிலை குறித்து தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்