சம்பூர் அனல் மின்நிலைய நிர்மாணத்திற்கு மக்கள் பூரண எதிர்ப்பு

சம்பூர் அனல் மின்நிலைய நிர்மாணத்திற்கு மக்கள் பூரண எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2016 | 7:32 pm

சம்பூர் அனல் மின்நிலைய நிர்மாணத்திற்கான சுற்றாடல் அதிகார சபையின் அனுமதி கிடைத்துள்ள நிலையில், அனல் மின் நிலைய நிர்மாணத்திற்கு சம்பூர் மக்கள் தமது பூரண எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

அனல் மின் நிலையம் எனும் தோற்றத்தில் தம் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதாக சம்பூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமது பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குமாறு திருகோணமலை சம்பூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்