கேள்விக்குறியாக மாறியுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை

கேள்விக்குறியாக மாறியுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை

கேள்விக்குறியாக மாறியுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2016 | 7:15 pm

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பல்வேறு தரப்பினர் ஒரு வருட காலமாக பேசுகின்ற போதிலும், இதுவரையில் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் 2 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகின்றமை வழமையாகும்.

எனினும் 2013 ஆம் ஆண்டு இறுதியாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியானதைத் தொடர்ந்து இதுவரை அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை நிமிரச் செய்யவதில் பெரும் பங்காற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வருடாந்தம் 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கும் நடைமுறைக்கு உள்வாங்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்ட போதிலும் இன்றும் இறுதியாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சம்பளத்திற்கே வேலை செய்ய வேண்டிய நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

தமது சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டுவது எப்போது என்ற கேள்வியுடனேயே வாழ்க்கையை நகர்த்த வேண்டிய நிலைக்கு பெருதோட்டத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதுவே கவலையளிக்கும் விடயம்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்