ஈமெயிலை கண்டுபிடித்த ரே டொம்லின்சன் காலமானார்

ஈமெயிலை கண்டுபிடித்த ரே டொம்லின்சன் காலமானார்

ஈமெயிலை கண்டுபிடித்த ரே டொம்லின்சன் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

07 Mar, 2016 | 3:55 pm

புறாவின் இறக்கையில் கட்டி கடிதம் அனுப்பியது, குதிரை வீரன் மூலம் தூது அனுப்பியது, பின்நாளில், லந்தர் விளக்கை ஏந்தியபடி, இரவு-பகல் பாராமல் ஓயாது ஓடிய அரசுப் பணியாளர்கள் மூலம் தகவல் பரிமாறியது, பின்னர் தந்தி மற்றும் தபால் சேவையின் மூலம் அஞ்சல் அனுப்பியது உள்பட அத்தனை பழங்கால வழக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘ஈ-மெயில்’ எனப்படும் மின்னஞ்சல் முறையை கண்டுபிடித்த ரேமண்ட் டொம்லின்சன், தனது 74 ஆவது வயதில் காலமானார்.

அமெரிக்காவில் பிறந்து மாஸாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற டொம்லின்சன், அர்பாநெட் சிஸ்டம் (ARPANET system) முறையில் நெட்வேர்க் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கணணியில் இருந்து இன்னொரு கணணிக்கு கடிதங்களை அனுப்பும் முறையை 1971 ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டுபிடித்தார்.

பின்னர் @ குறியீட்டுடன் தூரத்தில் உள்ள இதர கணணிகளுக்கும் அந்த தகவல்கள் போய் சேரும் புதிய தொழில்நுட்பத்தையும் வடிவமைத்தார்.

இன்று ஈமெயில் என்றழைக்கப்படும் இந்த செலவில்லாத துரிதமான கடிதப் போக்குவரத்தின் தந்தையாக விளங்கிய ரே டாம்லின்சன் தனது 74 ஆம் வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.

அயராத உழைப்பு மற்றும் தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்கிய அவரது மறைவுக்கு உலகின் பலநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான இணையதளவாசிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கூகுளின் ‘ஜிமெயில்’ குழுமமும் ரே டொம்லின்சன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்