வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணை

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணை

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2016 | 10:37 am

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எவரையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக இதுவரை தெரியவரவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி ருவண் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

சந்தேநபர்களை கைது செய்வதற்கு பொரளை பொலிஸாரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காயமடைந்த கர்ப்பிணிப் பெண் தெஹியோவிட்ட மாகம்மான பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்