ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தல்

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தல்

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2016 | 10:25 am

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என திராவிட முன்னேற்ற கழக தலைவர் தலைவர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

பவ வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் குறித்த 7 கைதிகளையும் விடுவிக்க கோரி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், ‘7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் மு.கருணாநிதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா? மாநில அரசுக்கு உள்ளதா? நீதிமன்றத்துக்கு உள்ளதா? என பட்டிமன்றம் நடத்துவதில் பயனில்லை எனவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கூறியுள்ளதாக த ஹிந்து வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் 7 பேரையும் விடுவிக்க மத்திய அரசு அல்லது 161 ஆவது பிரிவின் பிரகாரம் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’என கருணாநிதி தனது அறிக்கையூடாக வலியுறுத்தியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்