வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக துப்பாக்கிச் சூடு: கர்ப்பிணித் தாயொருவர் காயம்

வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக துப்பாக்கிச் சூடு: கர்ப்பிணித் தாயொருவர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2016 | 4:42 pm

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக கர்ப்பிணித் தாய் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த கைதியைப் பார்வையிட்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைக்கு முன்பாக குறித்த கர்பிணித் தாய் மீது இன்று பிற்பகல் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3.50 அளவில் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணித் தாயொருவரே துப்பாக்கிதச் சூட்டுக்கு இலக்கானதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் கேகாலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய வழங்கப்பட்ட தண்டனையின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உறவுமுறையினர் ஒருவரைப் பார்வையிடுவதற்காக குறித்த கர்ப்பிணித் தாயார் தனது மூத்த சகோதரி மற்றும் விளக்கமறியலில் உள்ளவரின் மனைவியுடன் சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.

சிறைச்சாலையிலிருந்து வெளியேறும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சிறைச்சாலையிலுள்ள பாதாளக் குழு உறுப்பினரின் உறவினர்களா என விசாரித்துவிட்டு பயணப் பையினைப் பறித்துள்ளனர்.

இதன்போது, பெண்கள் சத்தமிட்ட போது மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்