விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைக​ளை மிரிஹான முகாமில் தடுத்து வைக்குமாறு உத்தரவு

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைக​ளை மிரிஹான முகாமில் தடுத்து வைக்குமாறு உத்தரவு

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைக​ளை மிரிஹான முகாமில் தடுத்து வைக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2016 | 7:20 am

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த நிலையில் கைதான இந்திய பிரஜைகள் 8 பேரையும் மிரிஹான முகாமில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய பிரஜைகளை கொழும்பு சட்ட வைத்தியகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இறப்பர் முத்திரைகள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களான இந்திய பிரஜைகளை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (04) ஆஜர்படுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது இந்திய பிரஜைகள் 8 பேரையும் மிரிஹான முகாமில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதன்போது நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

வெள்ளவத்தை பகுதியிலுள்ள தங்குமிடமொன்றில் விசா இன்றி தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 6 பேர் நேற்று முன்தினம் இரவு கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலின் பிரகாரம், பாமன்டை பகுதியில் நேற்றிரவு மேலும் இரண்டு இந்திய பிரஜைகளை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்