மனித குரங்குகளை விட கிளிகள் புத்தி கூர்மையானவை: ஆய்வில் தகவல்

மனித குரங்குகளை விட கிளிகள் புத்தி கூர்மையானவை: ஆய்வில் தகவல்

மனித குரங்குகளை விட கிளிகள் புத்தி கூர்மையானவை: ஆய்வில் தகவல்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2016 | 12:36 pm

ஜெர்மனியில் உள்ள போசம் ருகர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஓனூர் குங்டர்சன் என்பவர் விலங்குகளை விட பறவைகள் புத்திசாலித்தனமானவையா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பாலூட்டி இன விலங்கான மனித குரங்குகளையும், பறவையினத்தில், கிளிகளையும் வைத்து தீவிர ஆராய்ச்சி நடத்தினார். அதில் மனித குரங்குகளைவிட கிளிகளே மிகவும் புத்தி கூர்மையானவை என கண்டறியப்பட்டது.

மனித குரங்குகளை விட கிளிகள் திறம்பட சிந்தித்து அவற்றை உடனே ‘பளிச்’சென வெளிப்படுத்தின. பாலூட்டிகளில் மூளையில் உள்ள செல்கள் பல அடுக்குகளாக உள்ளன.

அவை அறியும் ஆற்றலை கட்டுப்படுத்துகின்றன இது போன்ற மூளை செல் அமைப்பை நியோ ஹார்டெக்ரி என அழைக்கின்றனர்.

பறவைகளின் மூளை செல் அமைப்பு அது போன்று இல்லை. அவற்றில் மூளையின் மீது உறை போன்று செல்கள் போர்த்தப்பட்டுள்ளன அவை அறிவுத்திறனை மேம்படுத்துகின்றன.

மனித குரங்குக்கு 275 முதல் 500 கிராமும், பறவைகளுக்கு 5 முதல் 20 கிராமும் மூளை எடை உள்ளது. மனித குரங்கை விட பறவகைளுக்கு மூளையின் அளவு சிறியதாக இருந்தாலும் புத்திசாலித்தனத்தில் அவை சிறந்தவைகளாக விளங்குகின்றன என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்