பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2016 | 7:28 am

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது.

2012 ஆம் ஆண்டில் எப்பாவெல பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய கான்ஸ்டபிள் ஒருவருக்கும், அதே வருடத்தில் செவனகல பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி குறிப்பிட்டார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னரே அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று நீர்கொழும்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தின் உறுதிப்பத்திரமொன்று தொடர்பிலான அறிக்கையொன்றை விநியோகிப்பதற்காக 600 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டமை தொடர்பில் அந்த அலுவலக ஊழியர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைகுழுவின் விசாரணைப் பணிப்பாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்