பொத்துவில் பகுதியில் கடலில் மூழ்கி இருவரை காணவில்லை

பொத்துவில் பகுதியில் கடலில் மூழ்கி இருவரை காணவில்லை

பொத்துவில் பகுதியில் கடலில் மூழ்கி இருவரை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2016 | 11:10 am

பொத்துவில், கொட்டுகல்லி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கால் இடரி கடலில் வீழ்ந்த மூவரில் இருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது.

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 6 பேரில் ஒருவர் கால் இடரி நீரில் வீழ்ந்ததை அடுத்து. அவரைக் காப்பாற்ற முற்பட்ட இருவர் கடல் அலையினால் அள்ளுண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டதுடன், ஏனைய இருவரும் கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 14 மற்றும் 17 வயதுடைய இருவரே கடலில் மூழ்கியுள்ளதுடன், அவர்கள் தற்காலிகமாக பொத்துவில் பகுதியில் தங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

கடலில் மூழ்கி காணாமற்போன இரண்டு சிறுவர்களையும் தேடி பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்