பூண்டுலோயாவில் தளபாட விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

பூண்டுலோயாவில் தளபாட விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

பூண்டுலோயாவில் தளபாட விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2016 | 7:45 am

பூண்டுலோயா நகரில் அமைந்துள்ள தளபாட விற்பனை நிலையமொன்றில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.

இந்த தீ விபத்து நேற்றிரவு 7.45 அளவில் இடம்பெற்றுள்ளது.

விற்பனை நிலையத்தின் மூன்றாம் மாடியிலேயே தீ பரவியுள்ளதுடன், தீயினால் அந்த மாடியிலிருந்த தளபாடங்கள் அனைத்தும் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா தீயணைப்பு சேவைப் பகுதியினர், பிரதேச மக்களுடன் இணைந்து பொலிஸார் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

சுமார் மூன்று இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தளபாடங்கள் தீயினால் அழிவடைந்துள்ளன.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்