ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு

ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு

ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2016 | 12:50 pm

ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2014 ஆம் ஆண்டை விட 12,55600 பேர் கடந்த ஆண்டில் ஐரோப்பாவில் தஞ்சம் கோரியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகள் கூறுகின்றன.

அவர்களுள் சிரியா ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே முன்னிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துருக்கியினூடாக ஆயிரக்கணக்கானோர் நாளாந்தம் கிரேக்கத்தை நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அத்துடன் கிரேக்கம் மற்றும் மசிடோனிய எல்லைப் பகுதியில் இன்னும் 10,000 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

சிரியா மற்றும் மத்திய கிழக்கில் இடம்பெறும் மோதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்