​ஹொலிவூட்டில் தடம் பதிக்கப் போகும் அபிநயா

​ஹொலிவூட்டில் தடம் பதிக்கப் போகும் அபிநயா

​ஹொலிவூட்டில் தடம் பதிக்கப் போகும் அபிநயா

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2016 | 6:04 am

சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் அபிநயா. மாற்றுத்திறனாளியான இவர் தற்போது ‘அடிடா மேளம்’ என்ற நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அபிநயாவுக்கு ​ஹொலிவூட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பிரபல ஹொலிவூட் இயக்குனரும் கின்னஸ் சாதனையாளருமான ரூபம் சர்மா இயக்கவுள்ள ‘தி லிட்டில் பிங்கர்’ (‘The Little Finger’) என்ற ஆங்கில படத்தில் மொத்தம் 56 மாற்றுத்திறனாளிகள் நடிக்கவுள்ளதாகவும் அவர்களில் அபிநயாவும் ஒருவர் என்றும் அபிநயாவின் தந்தை ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஊனத்தை பெரிதாக கருதாமல் சாதனை செய்வதை விளக்குவதே இந்த படத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கவுள்ளதாகவும், படத்தில் பணியாற்ற இருக்கும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்