விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் அறுவர் கைது: விசாரணைகள் ஆரம்பம்

விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் அறுவர் கைது: விசாரணைகள் ஆரம்பம்

விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் அறுவர் கைது: விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

04 Mar, 2016 | 5:45 pm

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 6 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த இந்தியப் பிரஜைகள் நாட்டில் தங்கியிருந்தமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

அண்மையில் பதிவாகிய சிறுநீரக மாற்று வியாபாரத்துடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளனரா என்பது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

வெவ்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அதுகுறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் நிறைவடையும் வரை எதனையும் கூற முடியாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்