யாழ்ப்பாணத்தில் 2 பாடசாலைகளுக்கு ஜப்பான் 26 மில்லியன் ரூபா நிதியுதவி

யாழ்ப்பாணத்தில் 2 பாடசாலைகளுக்கு ஜப்பான் 26 மில்லியன் ரூபா நிதியுதவி

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2016 | 5:44 pm

யாழ். மாவட்டத்தின் இரண்டு பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய ஜப்பான் 26 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கத் தீர்மானித்துள்ளது.

அதற்கான ஒப்பந்தம் இன்று வட மாகாண ஆளுநர் இல்லத்தில் கைச்சாத்திடப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

வட மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் தற்போதை நிலைமைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு பாடசாலைகளின் அபிவிருத்திக்கென ஜப்பான் அரசாங்கத்தினால் 26 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக இதன்போது ஜப்பான் தூதுவர் அறிவித்துள்ளார்.

அதன்படி, யாழ். முத்துத்தம்பி மத்திய மகா வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கல்விக்கூடம் அமைப்பதற்கும் வகுப்பறைத் தொகுதியின் அபிவிருத்திக்குமென 11.4 மில்லியனும், அச்சுவேலி புனித திரேசா மகளிர் கல்லூரிக்கு 11.6 மில்லியனும் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பான் தூதுவர் கையெழுத்திட்டுள்ளார்.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் குறித்த இரண்டு பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்