தாமதமாக வீட்டிற்கு வந்த மகளை ‘கௌரவக் கொலை’ செய்த தந்தை

தாமதமாக வீட்டிற்கு வந்த மகளை ‘கௌரவக் கொலை’ செய்த தந்தை

தாமதமாக வீட்டிற்கு வந்த மகளை ‘கௌரவக் கொலை’ செய்த தந்தை

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2016 | 4:31 pm

பாகிஸ்தானில் பாரிய அளவில் கௌரவக் கொலைகள் இடம்பெற்று வருகின்றன.

அங்கு ஆண்டுதோறும் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கௌரவக் கொலைகள் என்ற பெயரில் கொல்லப்படுகின்றனர்.

கௌரவக் கொலையை மையக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட A Girl in the River என்ற ஆவணப் படத்திற்கு ஆஸ்கர் விருது கூட அண்மையில் வழங்கப்பட்டது.

இந்தப் படத்தை ஷர்மீன் ஒய்த் சினாய் என்ற பாகிஸ்தானியப் பெண் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், வெளியில் சென்று விட்டு தாமதமாக வீடு திரும்பிய 18 வயதுப் பெண்ணை அவரது தந்தை கௌரவக் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் தலைநகர் லாகூரைச் சேர்ந்த முஹமது ரஹ்மத் என்பவரே தனது மகள் கோமல் பீபியைக் கொலை செய்துள்ளார்.

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்து துப்பாக்கியால் மகளைச் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும், கொலையைப் புரிந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார் முஹமது ரஹ்மத்.

இது குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்