$29 மில்லியன் சொத்துக்கள்: பெரும்பகுதியை ஜிகாதிகளுக்கு வழங்குமாறு பின்லேடன் வேண்டுகோள்

$29 மில்லியன் சொத்துக்கள்: பெரும்பகுதியை ஜிகாதிகளுக்கு வழங்குமாறு பின்லேடன் வேண்டுகோள்

$29 மில்லியன் சொத்துக்கள்: பெரும்பகுதியை ஜிகாதிகளுக்கு வழங்குமாறு பின்லேடன் வேண்டுகோள்

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2016 | 5:19 pm

அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக செயற்பட்டு, அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஒசாமா பின் லேடன், 2011 ஆம் ஆண்டு அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினரால் பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் கொல்லப்பட்ட வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 113 ஆவணங்களில் சிலவற்றை அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணங்களில் ஒன்றில், அவர் தான் கொல்லப்பட்டுவிட்டால் அவரது சொத்துக்களில் பெரும்பகுதியை ஜிகாதிகளுக்கு செலவிடுமாறு குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 29 மில்லியன் டொலர் சொத்துக்கள் சூடான் நாட்டில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பின் லேடன், அதில் சிறு பகுதியை குடும்பத்தாருக்கு வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும், அவை பணமாக உள்ளதா அல்லது பொருளாக உள்ளதா என்று அவர் குறிப்பிட்டிருக்கவில்லை.

இதேவேளை, பின் லேடனின் ஆவணங்கள் பல விரைவில் வெளியிடப்படும் என கருதப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்