கைதிகள் பஸ் மீது துப்பாக்கிச் சூடு: தெமட்டகொட சமிந்த காயம்

கைதிகள் பஸ் மீது துப்பாக்கிச் சூடு: தெமட்டகொட சமிந்த காயம்

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2016 | 4:41 pm

கொழும்பு – தெமட்டகொட பகுதியில் கைதிகளை ஏற்றிச்செல்லும் பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, தெமட்டகொட சமிந்த என்பவர் காயமடைந்துள்ளார்.

பாதாளக்குழுத் தலைவர் என சந்தேகிக்கப்படும் தெமட்டகொட சமிந்த , பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் மூன்றாவது சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

வழக்கு விசாரணைக்காக சந்தேகநபரை ஏற்றிச் சென்ற பஸ்ஸினை இலக்கு வைத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றிலும், கார் ஒன்றிலும் வந்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த தெமட்டகொட சமிந்த, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிணை நிபந்தனைகளை மீறியிருந்த அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொரளை, வனாத்தமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்வம் தொடர்பில் அவருக்கு எதிராக மற்றுமொரு வழக்கு விசாரணை இடம்பெற்று வருவதுடன், கடந்த பொதுத் தேர்தலின் போது ப்ளூமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தையும் சிறைச்சாலையில் இருக்கும் போது அவர் திட்டமிட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்