கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில்

கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில்

கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2016 | 1:22 pm

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 9 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தம்மீதான சட்ட நடவடிக்கைளை விரைவுபடுத்தி தம்மை விடுதலை செய்யக்கோரியே கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் 13 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதத தடைச்சட்டத்தழன் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சட்டமாஅதிபர் திணைக்களத்திற்கு விடயங்களை எடுத்துரைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அவர்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அவர் கூறியுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்