காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க பதவிப்பிரமாணம்

காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2016 | 5:02 pm

காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சுக்கு மேலதிகமாக ஜோன் அமரதுங்க, காணி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் காணி அமைச்சர் எம்.கே.டீ.எஸ். குணவர்தனவின் மறைவிற்குப் பின்னர் அவருடைய அமைச்சுப் பதவியில் வெற்றிடம் நிலவியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்