அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2016 | 10:25 pm

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல வருடங்களாக வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு கைதிகளின் உறவினர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரண்டு கைதிகளை விடுவித்ததைப் போன்று ஏனைய கைதிகளையும் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்