மனித இனம் எதிர்கொண்டுள்ள உடனடி அச்சுறுத்தல் குறித்து லியானார்டோ டிகாப்ரியோ

மனித இனம் எதிர்கொண்டுள்ள உடனடி அச்சுறுத்தல் குறித்து லியானார்டோ டிகாப்ரியோ

மனித இனம் எதிர்கொண்டுள்ள உடனடி அச்சுறுத்தல் குறித்து லியானார்டோ டிகாப்ரியோ

எழுத்தாளர் Bella Dalima

01 Mar, 2016 | 4:09 pm

ஹொலிவுட்டின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதிற்கு முதல் முறையாகத் தெரிவான லியானார்டோ டிகாப்ரியோ, தனது ஏற்புரையில் புவி வெப்பமயமாதல் குறித்து தெளிவுபடுத்தியிருந்தார்.

‘தி ரெவனன்ட்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற லியானார்டோ டிகாப்ரியோ தனது ஏற்புரையில் கூறியதாவது,

[quote] இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். இயற்கை உலகுடனான மனிதர்களின் உறவே ரெவனன்ட் திரைப்படம். அதிக வெப்பமயமான ஆண்டாக 2015 பதிவான இந்த உலகத்தில், (ரெவனன்ட்) படப்பிடிப்பிற்காக பனியைத் தேடி, உலகின் தெற்கு மூலைக்குச் சென்றோம். காலநிலை மாற்றம் என்பது நிஜம். அது இப்போது நடந்து கொண்டிக்கிறது. மனித இனமே தற்போது எதிர்கொண்டிருக்கும் உடனடி அச்சுறுத்தல் அது. எந்த நடவடிக்கையையும் தள்ளிப் போடாமல் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அதற்காக உழைக்க வேண்டும்.

உலகில் பெரும் மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களுக்காகவும், கார்ப்பரேட்களுக்காகவும் பேசும் தலைவர்களை ஆதரிக்காமல் மனித இனத்துக்காக, உலகின் பூர்வகுடிகளுக்காக (indigenous people), காலநிலை மாற்றத்தால் நேரடியாக பாதிக்கப்படும் கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களுக்காக, நமது குழந்தைகளின் குழந்தைகளுக்காக, அரசியலாலும் பேராசையாலும் நசுக்கப்படும் குரல்களுக்காக பேசும் தலைவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். [/quote]

இந்த அற்புதமான விருதுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. நாம் நமக்குக் கிடைத்த இந்த உலகை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; நான் இன்றைய (விருது பெற்ற) இரவை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவில்லை. மிக்க நன்றி.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்