செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பிடியாணை

செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பிடியாணை

செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பிடியாணை

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2016 | 1:24 pm

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவரும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இன்று இடம்பெற்ற வழக்கொன்றில் ஆஜராகாத காரணத்தினாலேயே ஹட்டன் நீதவான் பிரசாத் லியனகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் பழனி திகாம்பரம் பயணித்த வாகனத்தை இடைமறித்து இடையூறு விளைவித்தமை தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்ற போது அமைச்சர் செந்தில் தொண்டமான் சுகயீனமுற்றுள்ளதாக தெரிவித்து அவரது வழக்கறிஞர் இன்று வைத்திய அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

குறித்த வைத்திய அறிக்கையை நிராகரித்த நீதவான் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 06 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்