குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் வீதியில் சென்ற பெண் மொஸ்கோ பொலிஸாரால் கைது

குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் வீதியில் சென்ற பெண் மொஸ்கோ பொலிஸாரால் கைது

குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் வீதியில் சென்ற பெண் மொஸ்கோ பொலிஸாரால் கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Mar, 2016 | 5:26 pm

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தாவுடன் வீதியில் சென்ற பெண் மீது பொலிஸாருக்கு சந்தேகம் வந்தது.

அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து பொலிஸார் நிறுத்திய போது, திடீரென தனது கைப்பையில் இருந்து ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக் காட்டியுள்ளார்.

‘உடனே என்னை விட்டுவிட்டு ஓடுங்கள். நான் ஒரு தீவிரவாதி. என் உடலில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன்’ என மிரட்டியதால் பொலிஸார் பயந்து விலகி ஓடியுள்ளனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, கையில் குழந்தையின் தலையைப் பிடித்தபடி அங்கும் இங்கும் நடந்து திரிந்த அந்தப் பெண்ணை மறைந்திருந்து பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர், அவர் வழங்கிய தகவலின் படி அவரது வீட்டிற்குச் சென்ற போது, வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.

தீயை அணைத்துவிட்டு வீட்டினுள் சோதனையிட்ட போது தலையற்ற குழந்தையின் உடல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அப்பெண் தெரிவித்திருப்பதாவது,

எனது பெயர் ஜியுல்சிஹிரா போபாகுலோவா (வயது 38), மத்திய ஆசியாவில் உள்ள உஸ்பெகிஸ்தான் நாட்டில் எனது கணவருடன் வசித்து வந்தேன். சில மாதங்களுக்கு முன்னால் இங்கு மொஸ்கோவில் பணிப்பெண் வேலை கிடைக்க, கணவரை விட்டுவிட்டு மொஸ்கோவில் குடியேறினேன்.

இங்கு நாஸ்டியா மெச்செரியகோவா என்ற 4 வயது குழந்தையைப் பராமரிக்க என்னை பணிப்பெண்ணாக பெற்றோர்கள் நியமித்தனர். 4 வயது குழந்தைக்கு மனநலம் சிறிது பாதிக்கப்பட்டிருந்தது.

எனது தாய்நாட்டில் உள்ள எனது கணவர் மற்றொரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டதாக எனக்கு தகவல் வந்தது. இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மேலும், என்னை இரண்டாவது மனைவியாக இருக்குமாறு எனது கணவர் கூறியதும் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அதே கோபத்துடன் வேலை செய்யும் வீட்டிற்குச் சென்றபோது, என் மூளைக்குள் வினோதமான ஒலிகள் எழுந்தன.

என கூறி உள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்