தொடர்ந்தும் மக்களின் இன்னல்களுக்கு விடை தேடும் படலத்தில் நியூஸ் பெஸ்ட்டின் “மக்கள் சக்தி”

தொடர்ந்தும் மக்களின் இன்னல்களுக்கு விடை தேடும் படலத்தில் நியூஸ் பெஸ்ட்டின் “மக்கள் சக்தி”

தொடர்ந்தும் மக்களின் இன்னல்களுக்கு விடை தேடும் படலத்தில் நியூஸ் பெஸ்ட்டின் “மக்கள் சக்தி”

எழுத்தாளர் Staff Writer

29 Feb, 2016 | 6:14 pm

ஆறாவது நாளாகவும், நியூஸ் பெஸ்ட்டின் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியர் அற்ற வைத்தியசாலை, ஒரு ஆசிரியருடன் இயங்கும் பாடசாலை என மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், நியூஸ் பெஸ்டின் மக்கள் சக்திக்கு இன்று பதிவாகின.

முல்லைத்தீவிலுள்ள எமது குழுவினர் இன்றும் இரு உப குழுக்களுக்காக பிரிந்து பல கஷ்டப்பிரதேசங்களுக்கு சென்றனர்.

மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலைபாணி கிராமத்தில் சுமார் 44 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மாந்தை கிழக்கிலுள்ள பாலைபாணி தமிழ் மகா வித்தியாலயத்தில் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புக்கள் காணப்படுகின்றன.

இந்த பாடசாலையில் ஒரு ஆசிரியர் மாத்திரமே பணியாற்றுவதுடன், 11 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இந்த பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்னர் மின் கம்பங்கள் நாட்டப்பட்டுள்ள போதிலும், மின்சார இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லையென இதன்போது மக்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் பூர்வீகமாக வாழும் தமக்கு, காணி உறுதிப்பத்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என இங்குள்ள மக்கள், நியூஸ் பெஸ்டின் மக்கள் சக்தி – இல்லங்கள் தோறும் குழுவினரிடம் இதன்போது குறிப்பிட்டனர்.

தொடர்ந்து, அம்பாள்புறம் பகுதியில் வீதி பிரச்சினை மற்றும் பஸ் சேவை முறையாக இடம்பெறாமை குறித்து எழுத்து மூலமாக இதன்போது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

அதனையடுத்து, 151 குடும்பங்கள் வாழும் கொள்ளவிளாங்குளம் பகுதி மக்களின் பிரச்சினைகள் கேட்டறியப்பட்டன.

கரும்புள்ளியான் பகுதிக்கு சென்ற எமது குழுவினரிடம், மின்சார வசதி வழங்கப்படாமை குறித்து மக்கள் முறைப்பாடு செய்தனர்.

இதேவேளை, முல்லைத்தீவில் கூழாமுறிப்பில் விவசாய காணிகளுக்கு செல்லும் பாலம் சேதமடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளன.

பெரியஇத்திமடு பகுதியில் தற்காலிக இருப்பிடமொன்றில் வாழும் வயது முதிர்ந்த இருவரை எமது குழுவினர் சந்தித்தனர்.

இந்த முதியோரின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் யுத்தத்தில் இறந்துவிட தற்போது தனிமையில் உதவிகற்று வாழ்கின்றனர்.

தொடர்ந்து கரடிபுலவு நோக்கி சென்ற எமது குழுவினர், கூலி வேலை செய்யும் கணவனை இழந்த இரு பெண்களை சந்தித்தனர்.

அத்துடன், முல்லைத்தீவு அபிவிருத்திக் குழுவினருடனும் மாவட்ட பிரச்சினைகள் தொடர்பில் நியூஸ் பெஸ்டின் மக்கள் சக்தி – இல்லங்கள் தோறும் குழுவினர் கலந்துரையாடினர்.

இதுமாத்திரமல்லாது நியூஸ் பெஸ்டின் மக்கள் சக்தி – இல்லங்கள் தோறும் திட்டத்தின் ஆறாவது நாள் நடவடிக்கைகள் வடக்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டது.

இரத்தினபுரி ஓபநாயக்கவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த எமது குழுவினர் வீதி சீரின்மையால் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

கல்கந்த, கிரம்ப, படேவெல, ஹத்தாஎல்ல, நரிஸ்ஸ, கொன்கல, பட்டதுர உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்ற எமது குழுவினர் மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.

பல வருடங்களாக இங்குள்ள வைத்தியசாலையில் வைத்தியரொருவர் இல்லை என பிரதேசவாசியொருவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஓபநாயக்கவில் பயணத்தை ஆரம்பித்த மற்றைய குழுவினர் உடவெல, அக்குரெல்ல தொலகந்த, ரன்வல உள்ளிட்ட கஷ்ட பிரதேசங்களுக்கு சென்றனர்.

வடமேல் மாகாணத்திலுள்ள எமது மற்றுமொரு குழுவினர், இப்பாகமுவ பான்கொல்ல கிராத்தில் இல்லங்கள்தோறும் குழுவினர் சென்றனர்.

தெதுரு ஓயாவிலிருந்து மண் அகழப்படுவதால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மக்கள் இதன்போது தெரிவித்தனர்.

இப்பாகமுவ புலத்வத்த, பிலெஸ்ஸ மற்றும் பெல்லேகல கந்த ஆகிய கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நியூஸ் பெஸ்ட் மக்கள் சக்தி குழுவினர் எழுத்து மூலம் பதிவு செய்துகொண்டனர்.

பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து நியூஸ் பெஸ்ட் மக்கள் சக்தி – இல்லங்கள் தோறும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நியூஸ் பெஸ்ட் மக்கள் சக்தி – இல்லங்கள் தோறும் குழுவினர், எதிர்வரும் 18 ஆம் திகதிவரை நாடு பூராகவும் பயணிக்கவுள்ளனர்.

தொடர்ந்தும் மக்களின் இன்னல்களுக்கு விடை தேடும் படலத்தில் நியூஸ் பெஸ்ட்டின் “மக்கள் சக்தி”

Posted by Newsfirst.lk tamil on Monday, February 29, 2016


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்