முன்னறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: இயற்கை அனர்த்தங்கள் காரணம் என விளக்கம்

முன்னறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: இயற்கை அனர்த்தங்கள் காரணம் என விளக்கம்

முன்னறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: இயற்கை அனர்த்தங்கள் காரணம் என விளக்கம்

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2016 | 11:36 am

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று (26) அவ்வப்போது மின்சார விநியோகம் தடைப்பட்டமையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கினர்.

இலங்கை மின்சார சபையினால் எந்தவித முன்னறிவித்தலுமின்றி மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

கொழும்பின் ஒரு சில இடங்களிலும், புத்தளம், மாத்தளை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, அநுராதபுரம், கம்பஹா மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் நேற்று மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, இயற்கை காரணங்களால் மின்சாரத் தடை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாவனையாளர்களுக்கு உடனடியாக மின்சாரத்தை விநியோகிக்கும் வழிமுறையொன்றை மின்சார சபை பின்பற்ற வேண்டுமென இலங்கை மின்சார ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மின்சார சபையிடம் காணப்படுகின்ற மனித வளத்தை அதற்காகப் பயன்படுத்தக்கூடிய வேலைத்திட்டமொன்றும் காணப்பட வேண்டுமென அந்த சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா, இயற்கை அனர்த்தங்களின்போது நாட்டின் மின்சார விநியோகக் கட்டமைப்பு இயங்குவதில் ஒரு சில பிரச்சினைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

ஆயினும், அந்தக் கட்டமைப்பைப் பாதுகாத்து மின்சார விநியோகத்தை சீராக வழங்குவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை பிரதமரின் ஆலோசனைக்கமைய மேற்கொண்டு வருவதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்