மட்டக்களப்பு சீலாமுனை வாவியிலுந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு சீலாமுனை வாவியிலுந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு சீலாமுனை வாவியிலுந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2016 | 11:39 am

மட்டக்களப்பு, சீலாமுனை வாவியிலிருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் இந்த சடலம் நேற்று (26) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் குறித்து நிலவுகின்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்