பப்புவா நியூ கினியாவில் சிறையிலிருத்து தப்பிச் செல்ல முயன்ற 11 கைதிகள் சுட்டுக்கொலை

பப்புவா நியூ கினியாவில் சிறையிலிருத்து தப்பிச் செல்ல முயன்ற 11 கைதிகள் சுட்டுக்கொலை

பப்புவா நியூ கினியாவில் சிறையிலிருத்து தப்பிச் செல்ல முயன்ற 11 கைதிகள் சுட்டுக்கொலை

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2016 | 4:09 pm

பப்புவா நியூ கினியாவில் சிறையை உடைத்துத் தப்பிச் செல்ல முயன்ற 11 கைதிகளைப் பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கடும் குற்றச்செயல்கள் புரிந்த குற்றவாளிகள் பப்புவா நியூ கினியாவின் பியுமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், 30 ற்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை பிற்பகல் சிறைக்காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையை உடைத்துத் தப்பினர்.

சிறைக் கண்காணிப்பாளர் அளித்த தகவலின் பேரில், பொலிஸார் அவர்களைத் துரத்திச் சென்றனர்.

இதையடுத்து, கைதிகள் 11 பேர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மேலும், 17 கைதிகள் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்