படகுகளை வீதியோரத்தில் நிறுத்தி புல்மோட்டை மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

படகுகளை வீதியோரத்தில் நிறுத்தி புல்மோட்டை மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

படகுகளை வீதியோரத்தில் நிறுத்தி புல்மோட்டை மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2016 | 3:42 pm

வெளிப்பிரதேச மீனவர்களின் வருகையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, புல்மோட்டை மீனவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளி மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி சுமார் 400 மீனவர்கள் தங்களின் படகுகளை வீதியோரத்தில் நிறுத்தி இன்று காலை தமது எதிர்ப்பை வெளியிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

புல்மோட்டை கிராமிய ஐக்கிய மீனவர் சமாசம், கரைவலை மீனவர் சங்கம், 2 ஆம் வட்டார மீனவர் கூட்டுறவு சங்கம் மற்றும் பொன்மலைக்குடா மீனவர் சங்கம் என்பன இணைந்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்