காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இன்று கோப்பாயில் நடைபெற்றது

காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இன்று கோப்பாயில் நடைபெற்றது

காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இன்று கோப்பாயில் நடைபெற்றது

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2016 | 3:46 pm

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ். மாவட்டத்திற்கான மற்றுமொரு கட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். கோப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று அமர்வு இடம்பெற்றதுடன், இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக ஏற்கனவே முறைப்பாடுகளை செய்திருந்த 232 பேருக்கு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும், 173 பேர் மாத்திரமே இன்று சாட்சியமளிப்பதற்காக பிரசன்னமாகியிருந்ததாகவும் நண்பகல் வரை 89 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் எச். டபிள்யூ. குணதாச குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்