ஜாஎல – ஏகல பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு

ஜாஎல – ஏகல பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு

ஜாஎல – ஏகல பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2016 | 9:14 am

ஜாஎல – ஏகல பிரதேசத்தின் குப்பை கொட்டும் இடத்தில் மனித எச்சங்களை ஒத்த எச்சங்கள் சில நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஏகல பிரதேசத்ததில் குப்பை கொட்டும் இடத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் அதிக துர்நாற்றம் வீசி வந்துள்ளது.

இதனயடுத்து குறித்த பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள பெண் ஒருவரால் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த இடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர் .

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி போப்லி குமார் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் மேலதிக பரிசோதனைகளுக்காக எச்சங்கள் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்