வவுனியா மாணவி கொலை; நீதி வேண்டி தொடரும் போராட்டம்

வவுனியா மாணவி கொலை; நீதி வேண்டி தொடரும் போராட்டம்

வவுனியா மாணவி கொலை; நீதி வேண்டி தொடரும் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2016 | 2:14 pm

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் 13 வயது மாணவி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று வட மாகாணத்தில் முழு கடையடைப்பு பேராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பாடசலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாமல் இருந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதால் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாமல் காணப்பட்டுகின்றன.

முழு கடையடைப்பு பேராட்டத்தினால் வவுனியாவிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

தனியார் மற்றும் அரச வங்கள் திறந்து காணப்பட்ட போதிலும் அதிகாரிகளின் வருகை குறைவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் தொடரும் ஹர்த்தால் காணரமாக மன்னார் மாவட்ட நீதிபதிகள் நீதிமன்ற செயற்பாடுகளில் கலந்து கொள்ளவில்லை என எமது பிராந்தி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வங்கிகள் செயற்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் மக்களின் வருகை குறைவாக காணப்படுவதுடன் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளமையால் மாணவர்க்ள திரும்பி சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்