மீண்டும் முதலிடத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

மீண்டும் முதலிடத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

மீண்டும் முதலிடத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2016 | 2:25 pm

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியதுடன் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்திய அணி 2 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 131 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை இன்று காலை துரத்திய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தயாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்கு தள்ளி அவுஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. பொதுவாக ஏப்ரல் 1 ஆம் திகதியை அடிப்படையாக வைத்து ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு பணப்பரிசு கிடைக்கும். இன்றைய போட்டிக்கு பின் அவுஸ்திரேலியா இந்தியா அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை.

எனவே தரவரிசையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்