”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்”; மக்கள் துயர் துடைக்கும் சமூகப்பணி இன்று ஆரம்பம்

”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்”; மக்கள் துயர் துடைக்கும் சமூகப்பணி இன்று ஆரம்பம்

”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்”; மக்கள் துயர் துடைக்கும் சமூகப்பணி இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2016 | 7:03 am

மக்களின் துயரை அறியும், மக்களின் துயரங்களை துடைக்கும் நியூஸ்பெஸ்ட் மற்றுமொரு மக்கள் சேவையை ஆரம்பித்துள்ளது.

நியூஸ்பெஸ்ட்டின் ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” நிகழ்ச்சித்திட்டம் இன்றிலிருந்து அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

நியூஸ்பெஸ்டின் மக்கள் சக்தி பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முன்நின்று செயற்பட்டது.

இம்முறை மக்கள் சக்தி வீடு வீடாகச் சென்று மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதற்காக செயற்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் சென்று கிராம மக்களை சந்திப்பதற்கு எமது குழுக்கள் தயாராகவுள்ளன.

இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம், புத்தளம், மணற்காடு மற்றும் மொனராகலையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகம் ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றதமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்