பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீட்டிப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீட்டிப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீட்டிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2016 | 5:30 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த நால்வரும் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதன் பிரகாரம், சந்தேகநபர்கள் நால்வரும் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, இந்த பிணை மனு மீது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கு மனுதாரர் தரப்பிற்கு எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி வரை மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமதி கால அவகாசம் வழங்கியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார் தின நள்ளிரவு ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்