பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு விசாரிக்கப்பட்டது

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு விசாரிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2016 | 8:28 pm

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு மீதான விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

ஷிரான் குணரத்ன, பத்மினி என். ரணவக்க மற்றும் எம்.சி.பி.எஸ் மொராயஸ் ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

வழக்கு விசாரணையின் போது சாட்சியாளர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய, இடமொன்றைப் பார்வையிட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாமினர் சென்றிருந்தனர்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகேயின் கோரிக்கைக்கு அமையவே நீதிபதிகள் இன்று சென்றிருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்