நேபாளத்தில் 23 பேருடன் சென்ற தனியார் விமானம் மாயமானது

நேபாளத்தில் 23 பேருடன் சென்ற தனியார் விமானம் மாயமானது

நேபாளத்தில் 23 பேருடன் சென்ற தனியார் விமானம் மாயமானது

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2016 | 11:30 am

நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் மேற்கேயுள்ள சுற்றுலாத்தலமான போக்காராவில் இருந்து ஜாம்சான் நகருக்கு புறப்பட்டுச் சென்ற தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் மாயமானது.

போக்காரா நகரில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த ‘தாரா ஏர்’ நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் இரண்டு வெளிநாட்டினர் இரு குழந்தைகள் உள்பட மொத்தம் 20 பயணிகளும், விமானி உள்பட 23 பேரும் இருந்ததாக தெரியவந்துள்ளது.

மலைப்பகுதி அருகே விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்னும் சந்தேகத்தில் அந்நாட்டு விமானப்படை விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்