நியூஸிலாந்து பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பு

நியூஸிலாந்து பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பு

நியூஸிலாந்து பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2016 | 9:36 am

நாட்டிற்கு வருகைதந்துள்ள நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீயை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெறுகின்றது.

நேற்று இரவு 11.55 மணியளவில் நாட்டிற்கு வருகை தந்த நியுசிலாந்து பிரதமர் ஜோன் கீயை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை நியுசிலாந்து பிரதமர் மற்று் இலங்கை பிரதமர் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக வெிளவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச ஜனநாயக சங்கத்தின் நிறைவேற்று குழு கூட்டத்தில் நியுசிலாந்து பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை கட்டியெழுப்பும் நோக்குடன் நாட்டிற்கு வருகை தந்துள்ள நியுசிலாந்து பிரதமர் ஜோன் கீ எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்