தமிழ் அரசியல் கைதியொருவர் இன்று விடுவிக்கப்பட்டார் 

தமிழ் அரசியல் கைதியொருவர் இன்று விடுவிக்கப்பட்டார் 

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2016 | 8:37 pm

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் இன்று வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரே விடுவிக்கப்பட்டுள்ளார்.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நபரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படுவதை ஆட்சேபித்து வழக்கு விசாரணையை எதிர்நோக்கி வந்த நபரே இன்று விடுதலை பெற்றுள்ளார்.

இதேவேளை, பயங்காரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்த மேலும் 8 சந்தேகநபர்களும் இன்று வழக்குகளில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டதாக அவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்